தஞ்சாவூரிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 90 (UR-27, BC-24, BCM-3, MBC/ DNC-18, SC-14, SCA-3, ST-1)\
சம்பளவிகிதம்: ரூ.14,000 - 47,500
வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 1.1.2019 தேதியின்படி 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த EX-SM பிரிவினர்கள் 48 வயதிற்கு மிகாமலும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 ஆம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக கூட்டுறவு பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 20.10.2019.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தஞ்சாவூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnjdrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.9.2019.மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.tnjdrb.in இணையதளத்தை பார்க்கவும்