தேனி:
நலிந்த நெசவாளர் கூட்டுறவு சங்கக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு கைத்தறி சம்மேளன (சிஐடியு) மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் சம்மேளனக்குழு கூட்டம் ஆண்டிபட்டியில் செவ்வாய்க் கிழமை மாநிலத்தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் இ.முத்துக்குமார் வேலையறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு தேனி மாவட்டத் தலைவர் சி.முருகன், கைத்தறி சம்மேளன நிர்வாகிகள் எஸ்.என்.துரைராஜ், என்.பி.நாகேந்திரன், இ.பாண்டியன், எஸ்.ராமர், கே.எஸ்.தங்கவேல், இ.என்.ராஜகோபால், கே.வி.ஈஸ்வரன், எம்.ஆர்.முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
தீர்மானங்கள்
இந்தக் கூட்டத்தில், கைத்தறி துணி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்துச் செய்ய வேண்டும். தனியார் நெசவாளர்களின் கூலி உயர்வு, பஞ்சப்படி, போனஸ் பிரச்சனை களுக்குத் தீர்வு காண துணி உற்பத்தி மற்றும் விற்பனை முறை ஒழுங்க மைப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பி னர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும். சட்டவிரோத துணி உற்பத்தியாளர்கள் மீது ரக ஒதுக்கீடுசட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கைத்தறி நலவாரியக் கமிட்டி அமைக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும். ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும். தனியார் நெசவாளர்களுக்கான சேமிப்பு பாதுகாப்பு நிதித் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.