education

img

மகாராஷ்டிரா வங்கியில்  வேலை

Bank of Maharashtra-ல் உள்ள 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Generalist Officer II
காலியிடங்கள்: 200 (UR-81, OBC-54, EWS-20, SC-30, ST-15)
சம்பள விகிதம்: ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 20 வயது முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Generalist Officer III
காலியிடங்கள்: 100 (UR-41, OBC-27, EWS-10, SC-15, ST-7)
சம்பளவிகிதம்: ரூ.41,020 - 51,490
வயதுவரம்பு: 20 வயது முதல் 38 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்குமான கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 2 முதல் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: UR/ OBC/ EWS பிரிவினர்களுக்கு ரூ.1180. SC/ ST பிரிவினர்களுக்கு ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bankofmaharashtra.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.12.2019.