வங்கி பணியாளர் தேர்வாணயம் (IBPS)-ல் உள்ள 12,075 கிளார்க் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Clerk
காலியிடங்கள்: 12,075
சம்பளவிகிதம்: IBPS விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 1.9.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.உச்ச வயதுவரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் IBPS எனப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வானது Preliminary மற்றும் Main எழுத்துத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
ஆன்லைன் Preliminary எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
ஆன்லைன் Main எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. (SC/ ST/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.100). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.