9 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும்’ (Open-Book Exam) முறைக்கு சிபிஎஸ்இ (CBSE) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த முறை 2026-27 கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைத்துப் பள்ளிகளிலும் இதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை; அது அந்தந்த பள்ளிகளின் விருப்பத்திற்கு உரியது எனவும் சிபிஎஸ்இ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறை ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது குரிப்பிடத்தக்கது.