economics

img

ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை!

இன்னும் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசு கடந்த ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தது. இதை 2023 மே 19-ஆம் தேதியில் ரூ.3.56 லட்சம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் இருந்த 97.62% 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டதாகவும், இன்னும் ரூ.8,470 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ரிசர்வ் வங்கிக்குச் செல்ல இயலாதவர்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

;