economics

img

நடப்பு நிதியாண்டில் 7.3 சதவிகிதமாகக் குறைந்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 

எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் புதன்கிழமை அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை 7.8 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

2022 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் எஸ்&பி கணித்திருந்தது.  அதை 7.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-22) இந்தியப் பொருளாதாரம் 8.9 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஏப்ரலில் உலக வங்கி 2022-23 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி முன்னறிவிப்பை முன்பு கணிக்கப்பட்ட 8.7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்தது. அதே நேரத்தில் ஐஎம்எஃப் கணிப்புகளை 9 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாகக் குறைத்துள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி, இந்தியாவின் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. அதே நேரத்தில் ஆர்பிஐ கடந்த மாதம் அதன் கணிப்பை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாகக் குறைத்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் பொருட்களின் விலை உயர்வுக்குப் பிறகு, பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை சமீபத்தில் குறைத்துள்ளன.

;