இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு கோதுமை விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் தில்லியில், கோதுமை விலை 1.6% உயர்ந்துள்ளது. ஒரு மெட்ரிக் டன் கோதுமையின் விலை ரூ.27,390க்கு விற்பனை செய்யப்படுகின்றது. விழா காலத்தை ஒட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கோதுமையின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதே போல், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்தால் நாட்டில் உணவு பணவீக்கம் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.