economics

img

வேலையில்லாத் திண்டாட்டம் டிசம்பரில் 9.6 சதவிகிதமாக அதிகரிப்பு.... நகர்ப்புற ஆண்கள் - பெண்கள் அதிகம் பாதிப்பு....

புதுதில்லி:
இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பின்னர், சற்று மேம்பட்டுவந்த வேலையின்மை பிரச்சனை, 2020டிசம்பரில் மீண்டும் மோசமாகி இருப்பது,இந்திய பொருளாதார கண்காணிப்பு மைய(CMIE) ஆய்வுகள் மூலம் தெரியவந்துள் ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளது.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதலே நாட்டில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. 2016 -ஆம் ஆண்டில் மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், 2018-இல் கொண்டுவந்த ஜிஎஸ்டி நடவடிக்கைகள் இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில்களை அழித்து, கோடிக்கணக்கான பேர்களை நடுத்தெருவிற்கு தள்ளியது.

2017-18 நிதியாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 6.1 சதவிகிதமாக உயர்ந்தபோது, அது 45 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையாக பார்க்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரித்து, கொரோனா பொதுமுடக்கத்திற்கு முன்பு 7.22 சதவிகிதம் என்ற அளவை தொட்டது.ஆனால், கொரோனா பொதுமுடக்கத் தின்போது, வேலையின்மை கடந்த 2020மார்ச் மாதத்தில் ஒரேயடியாக 23.52 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரித்தது. 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் மட்டும் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பிலிருந்து வெளியே தள்ளப்பட்டதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத் தரவுகள் தெரிவித்தன.

எனினும், மகாத்மா காந்தி ஊரகவேலையுறுதித் திட்டம் ஊக்கப்படுத்தப்பட்டதன் காரணமாக, கிராமப்புற வேலைவாய்ப்பில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு, ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம்7.43 சதவிகிதம் என்ற நிலைக்குத் திரும்பியது.ஜூன் 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு 6.5 முதல் 8.3 சதவிகிதமாக இருந்தது. இந்நிலையில்தான் டிசம்பர் மாதம் அது முன்பைவிட அதிகரித்து 9.06 சதவிகிதத்தை அடைந்துள்ளது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத வேலையின்மையின் உச்சமாக உள்ளது.அதிலும் குறிப்பாக, நகர்ப்புற வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. செப்டம்பரில் 8.45 சதவிகிதம், அக்டோபரில் 7.15 சதவிகிதம், நவம்பரில் 7.07 சதவிகிதம் என்று குறைந்துகொண்டே வந்த நகர்ப்புற வேலையில்லாத்திண்டாட்டம் டிசம்பரில் 8.84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதில் பெண்கள் மத்தியில் 10.5 சதவிகிதமாகவும், ஆண்களில் 8.7 சதவிகிதமாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

;