economics

img

உலகப் பணக்காரர்களை விட அதிகம் சம்பாதித்த அதானி... ஒரே ஆண்டில் 16.2 பில்லியன் டாலர் சொத்து அதிகரிப்பு...

புதுதில்லி:
கடந்த ஆண்டில் அதிகம்சம்பாதித்த உலகப் பெரும்பணக்காரர்களின் பட்டியலை‘புளூம்பெர்க்’ நிறுவனம் (Bloomberg Billionaires Index - 2021) வெளியிட்டுள்ளது. 

இதில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி கடந்த ஓராண்டில் உலகத்திலேயே அதிகம் சம்பாதித்தபணக்காரராக உருவெடுத்துள்ளார்.உலகின் முதற்பெரும் பெரும்பணக்காரர்களான எலான் மாஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோரை விடவும் அதிகமாக அதானி சம்பாதித்துள்ளார்.அதானியின் சொத்து மதிப்புஒரே வருடத்தில் 16.2 பில்லியன்டாலர் அதிகரித்து 50 பில்லியன்டாலர் அளவை அடைந்துள் ளது. இதன் மூலம் இந்தியபணக்காரர்கள் பட்டியலிலும் கவுதம் அதானி மிகப்பெரிய முன் னேற்றத்தை அடைந்துள்ளார்.

இந்தியாவின் ‘நம்பர் ஒன்’பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவிலான தடுமாற்றம் அடைந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பு 8.1 பில்லியன் டாலர் வரையில் மட்டுமே உயர்ந் துள்ளது.ஆனால், அதானி நிறுவனப்பங்குகளின் மதிப்பு, குறைந்தபட்சம் 50 சதவிகித வளர்ச்சியைஅடைந்துள்ளது. குறிப்பாக அதானி டோட்டல் 96 சதவிகிதம், அதானி எண்டர்பிரைசர்ஸ் 90 சதவிகிதம், அதானி டிரான்ஸ் மிஷன் 79 சதவிகிதம், அதானிபவர் - அதானி போர்ட்ஸ் ஆகியஇரண்டும் 52 சதவிகிதம் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. அதானி கடந்த சில மாதங்களாகத் தனது நிறுவனத்தின் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். குறிப்பாக, துறைமுகம், விமான நிலையம், டேட்டா சென்டர், நிலக்கரி சுரங்கம் ஆகியதுறையில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;