economics

img

சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கிய ஆக்சிஸ் வங்கி 

சிட்டி வங்கியின் இந்திய முக்கியப் பிரிவுகளை ஆக்சிஸ் வங்கி கைப்பற்றியுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு வங்கியான சிட்டி வங்கி 1902 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் 13 நாடுகளிலிருந்தும் வெளியேறப் போவதாக இந்த வங்கி சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவின் சில்லறை வர்த்தப் பிரிவிலிருந்து சிட்டி வங்கி வெளியேறியுள்ளது.

இதனிடையே, இந்தியாவைச் சேர்ந்த தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ளது. சிட்டி வங்கியுடைய ரீடைல், கிரெடிட் கார்டு, ஸ்மால் மைக்ரோ பைனான்ஸ், வெல்த் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகளை ஆக்சிஸ் வாங்கி வாங்கியுள்ளது. 

இந்த இணைப்புக்குப் பின்னர் சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையார்ளாக மாறுவார்கள் என்றும், ஆக்சிஸ் வங்கி தரும் தொழில்நுட்ப மற்றும் பிற சேவைகள் அனைத்தும் சிட்டி வங்கி வாடிக்கையாளர்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சிட்டி வங்கியில் பணியாற்றிய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் எனவும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.