எஸ்.பி.ஐ வங்கியின் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 0.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 27-ஆம் தேதி முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகித உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட பருவகாலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு மட்டும் இந்த வட்டி விகித உயர்வு பொருந்தும்.
அதன்படி, 7 முதல் 45 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 3.5% ஆகவும், 46 நாட்கள் முதல் 179 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 4.75% ஆகவும், 180 முதல் 210 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 5.75% ஆகவும், 211 நாள்கள் முதல் ஒராண்டுக்குக் குறைவான பருவகாலத்திற்கு 6% ஆகவும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பருவகாலத்திற்கு 6.75% ஆகவும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், முதியோர்களும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் கீழ் வருமாறு:
7 முதல் 45 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 4% ஆக உயர்வு; 46 நாட்கள் முதல் 179 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 5.25% ஆக உயர்வு; 180 முதல் 210 நாள்கள் வரையிலான பருவகாலத்திற்கு 6.25% ஆக உயர்வு; 211 நாள்கள் முதல் ஒராண்டுக்குக் குறைவான பருவகாலத்திற்கு 6.50% ஆக உயர்வு; 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக பருவகாலத்திற்கு 7.25% ஆக வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.