குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டும் என நடைமுறை அனைத்து வங்கிகளிலும் இருந்தது. இல்லையென்றால், அதற்கு தனி அபராதமாக ரூ.25 முதல் ரூ.45 வரை விதிக்கப்படும். இந்த சூழலில், அண்மையில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை என கனரா வங்க்கி அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியிலும், சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.