திங்கள், ஜனவரி 18, 2021

economics

img

தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பது, நாட்டிற்கு ஆபத்து... ரகுராம் ராஜன், விரால் ஆச்சார்யா எச்சரிக்கை

புதுதில்லி:
தனியார் தொழில் நிறுவனங்களே, வங்கிகளை நடத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்று, ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழு அளித்துள்ள பரிந்துரைக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்மற்றும் முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

“ ஐஎல்&எப்எஸ் (IL&FS) மற்றும் ‘யெஸ்’ (YES) வங்கிகளின் தோல்விகள் நம்கண் முன் உள்ளன. வங்கியியலில், கார்ப்பரேட் ஈடுபாடு குறித்து நாம் முன்பே பரிசோதித்து பார்த்து விட்டோம். ஆனால், அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பல வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவதுடன், வராக்கடனிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், இப்போது எதற்காகஇந்த முடிவு? நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் தொழில் நிறுவனங்களை வங்கிகள்தொடங்க அனுமதிப்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல.கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நடத்தும் உரிமங்கள் வழங்கப்பட்டால், அந்நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் குவிக்கப்படும். இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களே கடனில்தான் இருக்கின்றன. தற்போது அந்த நிறுவனங்களே வங்கிகளை நடத்தும்போது, தங்களுக்கு தேவையான கடன்களை, எந்தக் கேள்வியுமின்றி, தங்களுடைய வங்கிகளிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொள்வார் கள். ஒரு கடனாளரால் நடத்தப்படும் வங்கியானது, எப்படி ஒரு நல்ல கடனை வழங்கமுடியும்?

ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கிஅமைப்புகளுக்கு அனைத்து விதமான தகவல்கள், உலக நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தெரிந்த நிலையிலும்கூட, அந்த வங்கிகள் கொடுக்கும் மோசமான கடனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தொழில் நிறுவனங்களையே வங்கிகள் நடத்த அனுமதிப்பது, முறையற்ற கடன்கள் மற்றும்பல்வேறு மோசடிகளுக்கே வழிவகுக்கும். இவ்வாறு ரகுராம் ராஜனும், விரால் ஆச்சார்யாவும் கூறியுள்ளனர்.

;