districts

img

பாலாற்று பாலத்தில் சீரமைப்பு பணி முடியும் வரை தற்காலிக பேருந்து சேவை மாணவர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு, மார்ச் 8- சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் அருகே, பாலாற்றின் மீது இரு  மேம்பாலங்கள் கட்டப்பட் டுள்ளன. இதில், செங்கல் பட்டு, மதுராந்தகம் செல்லும் பழைய பாலம்  சேதமடைந்தது. இதை யடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், பிப். 7 முதல் சீரமைப்பு பணி துவங்கி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுராந்தகத்தி லிருந்து செங்கல்பட்டு வரும் மார்க்கத்தில் உள்ள பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மார்ச் மாதம் 20ம்  தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. பிலாப்பூர், காவூர், காவிய தண்டலம், ஓரக்காட்டுப் பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ் சாலையை அடைந்து, சென்னை நகருக்கு இயக்கப் படுகின்றன. இதனால் மதுராந்தகம் பகுதியிலிருந்து செங்கல் பட்டு நகருக்கு நாள்தோ றும் வரும் பள்ளி கல்லூரி  மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பணி நடைபெற்றுவரும் பாலத்தின் ஓரத்தில  இருசக்கர வாகனங்கள்  மட்டுமே அனுமதிக்கப் படுகிறது.  இருச்சர வாகனங்களும் குறுகிய பாதையில் செல்ல வேண்டும் என்பதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பேருந்துகளும் கிராமங்கள் வழியாக சுற்றிக் கொண்டு வருவதால் மாணவ-மாணவிகள் பாலத்தின் அந்தகரையில் இறங்கி செங்கல்பட்டுக்கு 7 கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள், அரசுப் பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து பாலாறு கரை வரையிலான இருங்குன்றம்பள்ளி வரை காலை நேரங்களில் தற்காலிகமாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;