districts

நூறு நாள் வேலையில் மோசடிக்கு உடன்படாத பெண் மேற்பார்வையாளர் படுகொலை

செங்கல்பட்டு, ஜூன் 27- மதுராந்தகம் அருகே பெண்ணை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கீழ்நீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிதாஸ் இவரது மனைவி தேசம்மாள் (40) இவர் இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக இருந்து வரு கின்றார்.

இதே செய்யூர் அருகே தண்டரை கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபாபதி (67) இவர் தனது உறவினர்கள் மூன்று பேர் வேலைக்கு வராமல் வேலைக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை தேசம்மாள் ஏற்க மறுத்ததால்  சபாபதி, ஆபாசமான வார்த்தை களால் திட்டியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை தேசம்மாளின் மார்ப்பு பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடினார்.  ரத்த வெள்ளத்தில் இருந்த தேசம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் தேசம்மாள் உயிரிழந்தார். தேசம்மாள் சகோதரி மகன் அருண்குமார் (25) கடந்த 2016 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை  செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சசிரேகா ஆஜரானார். கொலைக்கான அனைத்து சாட்சியங்களும் உறுதியா னதால் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றவாளி சபாபதிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.7500  அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து குற்றவாளி சபாபதி  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

;