districts

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தக்கோரிக்கை

செங்கல்பட்டு, ஜன.31- செங்கல்பட்டு மாவட்டத்தில்  வட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக ளுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாவட்டத் தலைவர் தாட்சாயிணி மாவட்ட செயலாளர் வி.அரி கிருஷ்ணன் ஆகியோர் செங்கல் பட்டு, மதுராந்தகம் கோட்டாட் சியர்களிடம் கொடுத்த மனுவில்,  வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் மாற்றுத் திறனாளி உதவித்தொகை. 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது முறையாக தீர்வுகாண மறுப்பதும், அலைக் கழிப்பதும் தொடர்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் குறைதீர்  கூட்டத்தில் மட்டுமே முறையிட வாய்ப்புள்ளது. இது மாவட்டம் முழு வதும் உள்ள மாற்றுத் திறனாளி களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தீர்வு காண்பதற்கு  காலதாமதம் ஏற்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை  மனுக்களை பெற்று அவற்றுக்கு உடனடியாக  தீர்வு காணும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட  நேரம் அறிவித்து வட்டாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவை அளித்தபோது சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் லிங்கன், சுப சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;