செங்கல்பட்டு, பிப்.22- செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஆகிய 4 நகராட்சிகளுக்கும், கருங்கோழி, அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 6 பேர் பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. செவ்வாயன்று (பிப் 22) வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் திமுக 10, அதிமுக 5, பாமக 3, இடங்களை கைப்பற்றின. திருப்போரூர் பேரூராட்சியில் மொத்த முள்ள 15 வார்டுகளில் திமுக 10, அதிமுக 2, மதிமுக1, விசிக 1, சுயேட்சை 1, இடங்களை கைப்பற்றின. மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 9, திமுக 4, மதிமுக 1, சுயேட்சை 1 இடங்களையும் கைப்பற்றின. அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 9, அதிமுக 5, சுயேட்சை 1 இடங்களையும் கைப்பற்றின. கருங்குழி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக 11, அதிமுக 1, சுயேட்சை 3 இடங்களையும் கைப்பற்றினர். இதேபோன்று இடைக்கிநாடு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 7, அதிமுக 6, காங்கிரஸ் 1, பாமக 2, விசிக 1, தேமுதிக 1, சுயேட்சை 3 இடங்களையும் கைப்பற்றின. மதுராந்தகம் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் திமுக 19,அதிமுக2, சுயேட்சை 3 இடங்களையும் கைப்பற்றின. மறைமலைநகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் திமுக 11, அதிமுக 6, தேமுதிக 2, ஐஜேகே 1, சுயேட்சை 1 இடங்களையும், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள் 30 வார்டுகளில் திமுக 20, அதிமுக 8, சுயேட்சை 2 இடங்களையும் கைப்பற்றின. செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 22, அதிமுக 6, விசிக 1, சுயேட்சை 4 இடங்க ளையும் கைப்பற்றின. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி தவிர்த்து மற்ற இடங்களில் திமுக அமோக வெற்றி பெற்றது. தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்த முள்ள 70 வார்டுகளில் 54 இடங்க ளில் வெற்றிபெற்றுள்ளது. திமுக 50 இடங்களிலும், அதிமுக 9வார்டு களிலும் காங்கிரஸ் 2வார்டுகளில் சிபிஎம், மதிமுக தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. சுயேட்சைகள் 7வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.