districts

img

திருவிக நகர் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம், ஜூன் 6- செங்கல்பட்டு மாவட்டம்,  மதுராந்தகம் நகராட்சிக்குட் பட்ட திருவிக நகர் பகுதியில் மேச்சேரி செல்லும் சாலை யில் அரை நூற்றாண்டுக்கு மேலாக 76 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களுக்கு வருவாய் த்துறை,நீர்வளத்துறை  சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நோட்டிஸ் கொடுத்து வீடுகளை அகற்ற உத்தர விட்டனர். இந்நிலையில் முன்அறிவிப்பின்றி வீடுகளை காலி செய்திட வேண்டும் என நிர்வாகம் கூறியதால் மாற்று வீடின்றி வாழ்ந்த வீடுகளை காலி செய்ய முடியாமல்  அப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் வரு வாய் துறை மாற்று இடம்  கொடுக்காமல் கடந்த மார்ச் மாதம் வீடுகளை இடித்து தள்ளினர்.   வீடுகளை இழந்த வர்களுக்கு மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் மாற்று இடம் 1.16 ஏக்கர் நிலத்தில் வழங்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 70 நாட்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வாழ் வாதாரத்தை இழந்துள்ள திருவிக நகர் மக்களுக்கு   மதுராந்தகம் நகராட்சிக் குட்பட்ட பகுதியில் மாற்று இடம் வழங்கி வீடு கட்டித் தர   வலியுறுத்தியும், வருவாய்த்  துறை தாமதம் செய்வதை  கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மது ராந்தகம் வட்டக்குழு சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. கட்சியின் மதுராந்த கம் வட்டக்குழு உறுப்பினர்  ஆர்.நடராஜி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, மதுராந்த கம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் டி.கிரு ஷ்ணராஜ் ஆகியோர் பேசி னர். முன்னதாக அம்பேத்கர்  சிலை அருகில் இருந்து ஊர் வலமாகச் சென்று வட்டாட்சி யரிடம் கோரிக்கை மனு வினை வழங்கினர்.

;