districts

img

வனப்பகுதியில் அழுகிய வாத்து முட்டைகள் வீச்சு

வேலூர், மார்ச் 18- வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  ராமாபுரம் கிராமம் தமிழ்நாடு ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளது.  ஆந்திர மாநிலத்தில் இருந்து இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தமிழ்நாடு எல்லையோரம் உள்ள வனப்பகுதி யில் பல்லாயிரக்கணக்கான அழுகிய வாத்து முட்டைகளை வீசிச் செல்கின்றனர். இந்த அழுகிய முட்டைகளை மான், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்கு கள் சாப்பிடுவதால் அவை நோய் வாய்ப் படுகின்றன. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுவாச கோளாறு ஏற்படுவதாக அருகில் வசிப்பவர்கள் கூறு கின்றனர். எனவே தமிழக எல்லையோரம் உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை முழு மையாக சோதனை செய்து பிறகே அனு மதிக்க வேண்டும். அழுகிய நிலையில் உள்ள  முட்டைகளை வீசிச் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;