வேலூர், பிப்.8 - வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டு களில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுகின்றனர். 2 இடங்களுக்கு போட்டியின்றி கவுன்லர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற் கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைந்தது. வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 180 வார்டு களில் 178 இடங்களுக்கு 819 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதில், வேலூர் மாநகராட்சி 58 வார்டுகளுக்கு 354, குடி யாத்தம் நகராட்சி 36 வார்டுகளுக்கு 165, பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளுக்கு 97 பேரும் போட்டியிகின்றனர். ஒடுகத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 38 பேரும், பள்ளிகொண்டா பேரூராட்சி 18 வார்டுகளுக்கு 64 பேரும், பென்னாத்தூர் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 52 பேரும், திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளுக்கு 49 பேரும் களத்தில் உள்ளனர். வேலூர் மாநகராட்சி 7-வது வார்டுக்கு திமுக வேட்பாளர் புஷ்பலதா வன்னியராஜா, 8-வது வார்டுக்கு திமுக வேட்பா ளர் எம்.சுனில்குமார் ஆகி யோர் போட்டியின்றித் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.