districts

இராஜபாளையம் அருகே கண்மாயில் ஆண் சடலம் கொலையாளிகள் 3 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

விருதுநகர், ஜூன் 18- இராஜபாளையம் அருகே தளவாய்புரம் கண்மாயில் சாக்கு மூட்டையில் ஆண்  பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர் பாக போலீசார் நடத்திய விசாரணையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இளைஞரை கடத்தி வந்து கொலை செய்து கண்மாயில் பிணத்தை வீசி சென்றது தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் மாரிமுத்து (27). டிப்ளமோ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், முகநூல் மூலம் ராகினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்  பட்டுள்ளது. அப்பெண், தான் வசதிபடைத்த வர் எனவும், தனக்கு தங்களை பிடித்து உள்ளது எனவும் ஆசைவார்த்தை கூறி யுள்ளார். இதை நம்பிய மாரிமுத்து, அவரி டம் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.  இந்த நிலையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. எனவே, ரூ.5  லட்சம் வேண்டும் என அப்பெண் கேட்டுள் ளார். இதையடுத்து, மாரிமுத்து ரூ.5 லட் சத்தை கடன் வாங்கி ராகினிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்பு, ராகினி தனது தொடர்பை துண்டித்து விட்டார். இதையடுத்து ராகினி, மாரிமுத்துவின் உறவினர் வில்வதுரைக்கு வலைவீசியுள் ளார். இவர் தென்காசி மாவட்டம் மணி முத்தாறு சிறப்பு காவல் படையில் காவல ராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த  ஊர் கும்மிடிப்பூண்டி ஆகும். அதன்பின் னர் வில்வ துரையின் உறவினர்கள் இசக்கி  ராஜா, அவரது மனைவி இளவரசி, மற்றொரு  உறவினர் ரவிக்குமார் ஆகியோரும் ராகினி யுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

பின்னர் வில்வதுரை உள்பட அனை வரும் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் ராகினியுடன் சேர்ந்து பணம் பறித்து வந்துள்ளனர். இந்தநிலையில், பணத்தை பறிகொடுத்த மாரிமுத்து அடிக்கடி பணம் கேட்டு, வில்வதுரையிடமும் ராகினி யிடமும் தொந்தரவு செய்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த ராகினி, வில்வ துரையிடம் மாரிமுத்துவை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, வில்வதுரை தனது நண்பர்களுடன் சேர்ந்து மாரி முத்துவை அழைத்து தூத்துக்குடி சென்று ராகினியிடம் பணம் பெற்று வரலாம் என கூறி அவரை காரில் கடந்த 28 ஆம் தேதி அழைத்து வந்துள்ளனர். பின்பு, சங்கரன்கோவில் பகுதியில் வைத்து மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரி வித்துள்ளனர். பின்னர் உடலை சாக்கிற்குள் போட்டு கட்டி, தளவாய்புரம் - புனல்வேலி செல்லும் சாலையில் உள்ள இரட்டை கண்மாய்க்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் மாரிமுத்துவின் அண் ணன், கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாக காவல் நிலையத்தில் தனது தம்பியை காண வில்லை என புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைத் தேடி வந்தனர். பின்பு, ராகினி மற்றும் வில்வ துரை  குறித்த விவரங்கள் கிடைத்தது. இதை யடுத்து, மணிமுத்தாறு காவல் படையில் விசாரித்தபோது வில்வ துரை அங்கு இல்லை  என பதில் கிடைத்தது. இதனால் சந்தேகம டைந்த போலீசார், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த வில்வ துரை மற்றும் இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்த னர். அதன்பின்பு, அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது.  மேலும் இவ்வழக்கு தொடர்பாக தூத்துக்  குடி மாவட்டம், கயத்தார் பகுதியை சேர்ந்த ராகினி மற்றும் இசக்கிராஜாவின் மனைவி இளவரசி ஆகியோரை தனிப்படை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.