districts

img

விருதுநகரில் 640 கிராமில் பிறந்த குழந்தையை 1 கிலோ வரை வளர்த்து சாதனை!

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 640கிராமில் பிறந்த பெண் குழந்தையைத் தீவிர கண்காணிப்பின் மூலம் 1 கிலோ வரை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர். 
வெம்பக்கோட்டை யைச் சேர்ந்த வனிதா-மாரிமுத்து தம்பதியர். கர்ப்பிணி வனிதாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். 
இந்தநிலையில், வனிதாவிற்குக் கடந்த மார்ச்.,14 அன்று 26வாரம் மட்டுமே வளர்ச்சியடைந்த 640 கிராம் மட்டுமே எடை கொண்ட பெண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்துள்ளது. 
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணியின் அறிவுரையின்படி, அக்குழந்தை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சேர்க்கப்பட்டது. பின்பு, அக்குழந்தைக்குத் தலைமை மருத்துவர் ஜவஹர், குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முருகேசலட்சுமணன், மருத்துவர்கள் சண்முக மூர்த்தி, பிரியங்கா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சையளித்தனர். 
மேலும் அக்குழந்தைக்கு செயற்கை சுவாசமும், உயர்ரக மருந்துகளும் வழங்கப்பட்டது. கண், காது, இருதயம் போன்ற உறுப்புகள் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு உரிய சிகிச்சையாக்கப்பட்டன. கங்காரு அரவணைப்பும் தரப்பட்டது. இதையடுத்து, குழந்தை நன்கு தேறி 1கிலோ எடைக்கு வளர்ச்சியடைந்தது. 
இந்தநிலையில், வனிதா-மாரிமுத்து தம்பதியரிடம் குழந்தையை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கு மணி ஒப்படைத்தார். மேலும் குழந்தையின் வளர்ச்சிக்காகத் தொடர் சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 
 

;