ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் வடக்கு தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்படவும், நெல் கொள்முதல் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய தலைவர் வனராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்படாவிடில் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், தமிழக விவசாய சங்க பொறுப்பாளர் ராமச்சந்திர ராஜா மற்றும் விச பிரதிநிதிகள் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்,