districts

ரூ.3 கோடி நிலத்தை மீட்டுத் தரக்கோரி விருதுநகர் ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயற்சி

விருதுநகர், ஜூன் 14- ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை ஆள்  மாறாட்டம் செய்து விற்பனை செய்ததாக வும், அதை மீட்டுத் தரக்கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடும்பத்து டன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே உள்ள சுத்தமடம் கிரா மத்தைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் பாண்டுரங்கன். விவசாயம் செய்து வரு கிறார். இவரது தாத்தா முத்தையாவிற்கு சொந்தமான 90 சென்ட் நிலம் அருப்புக் கோட்டை அருகே உள்ள பந்தல்குடி பகுதி யில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கூறப்படுகிறது.  இந்நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் வேலுச்சாமி என்ப வரின் தாத்தா பெயரும் முத்தையா ஆகும்.  எனவே, கடந்த 1982 டிசம்பர் 27 அன்று தூத்துக்குடியைச் சேர்ந்த கதிரேசன் என்பவ ருக்கு போலியான ஆவணங்கள் மூலம்  ஆள்மாறாட்டம் செய்து மேற்படி நிலத்தினை  பந்தல்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக கிரையம் செய்ததாக கூறப்படு கிறது.  எனவே, மேற்படி பத்திரப் பதிவை ரத்து செய்யக்கோரி 2021 டிசம்பர் 1 அன்று பாண்டு ரங்கன், மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தா ராம். இதனால், தொடர்ந்து மிரட்டல் விடு வதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், பாண்டுரங்கன் தனது  குடும்பத்தினருடன் விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண் ணெய் கேனுடன் மனு கொடுக்க வந்தி ருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணி யில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

;