districts

img

கூடுதல் பேருந்து கேட்டு மாணவர்கள் மறியல்

வாலாஜா, செப். 15- ராணிப்பேட்டை மாவட் டம் வாலாஜாபேட்டை அடுத்த பாகவெளி கிராமத் திற்கு கூடுதல் பேருந்து களை இயக்கக் கோரி மாண வர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். பாகவெளி கிராமத் தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்ற னர். இந்த ஊரிலிருந்து ஏரா ளமான மாணவர்கள் பள்ளி,  கல்லூரிகளுக்கு ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர் பகுதிகளுக்கு செல்ல  வேண்டியுள்ளது. ஆனால்  தங்களது கிராமத்தில்  இருந்து இயக்கப்படும் பேருந்து வாலாஜாப் பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் முசிறி,  சென்னசமுத்திரம், தென் கடப்பந்தாங்கல், வள்ளுவம் பாக்கம் பெல்லியப்பா நகர்  ஆகிய பகுதிகளில் இருந்து  ஏராளமான மாணவர்கள் வருவதால் கூட்ட நெரி சலில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே தங்களது கிராமத் தில் இருந்து இயக்கப்படும் பேருந்தினை விஷாரம் வரை  இயக்க வேண்டும் மற்றும்  கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என  வலியுறுத்தி மாணவர்கள்  அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர் மற்றும்  வாலாஜா பேட்டை வட்டாட்சி யர் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

;