districts

img

தொகுதி நிதியிலிருந்து முடிவுற்ற பணிகள்

மதுரை, டிச.31-  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை  மாநகராட்சி பகுதிகளில் முடிவுற்ற பணி களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சனிக்கிழமை அன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இதன்படி, தெற்கு வாசல் பகுதி வார்டு  53, காஜா தெருவில் ரூ.12.50 லட்சம் மதிப்  பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையம், அனுப்பானடி மெயின் ரோடு வார்டு  42-ல் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ள பேருந்து நிலைய நிழல்குடை, நரி மேடு வார்டு 32 தாமஸ் தெரு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி மண்டலம் 5, வார்டு 73, முத்துப்பட்டி விரி வாக்க பகுதி ரூ.5 லட்சம் மதிப்பில் போர்  வெல் சின்டெக்ஸ், வார்டு 78, தென்றல் நகர்,  குறுக்கு தெரு பகுதியில் ரூ.12. 50 லட்சம்  மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகர் 1-வது தெருவில் ரூ.7 லட்சம்  மதிப்பில் பேவர் பிளாக் சாலை, மத்திய தொகுதி மண்டலம் 3 வார்டு 75, ஆண்டாள் புரம், பழைய காலனி பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சின்டெக்ஸ் போர்வெல் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திறந்து வைத்தார். 

நிகழ்வில், மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், மண்டல தலைவர்கள் ஆ. முகேஷ் சர்மா, சரவண புவனேஸ்வரி, சுவிதா  விமல், பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பி னர்கள் டி.குமரவேல், எஸ்.அருண்குமார், செல்வி கார்மேகம், எஸ்.எஸ்.போஸ், ப. தமிழ்ச்செல்வி, வே.லக்ஷிகாஸ்ரீ மற்றும்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன்,  மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நர சிம்மன், ஜெ.லெனின், எஸ்.அழகர்சாமி, பகு திக் குழு செயலாளர் பி.ஜீவா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கோபிநாத், கே.அலா வுதீன், மேற்கு 2 பகுதிக் குழு செயலாளர் ஏ.எஸ்.செந்தில்குமார், முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.