மதுரை, ஜூலை 5- நிதிச்சுமையை காரணம்காட்டி மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர் வாகம் பணி நீக்கம் செய்த 136 ஊழி யர்கள் மீண்டும் பணி அமர்த்தக் கோரி முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலா கப் பணிபுரிந்துவந்த தொகுப்பூதியப் பணியாளர்கள் (CPCLR) மற்றும் தற் காலிகப் பணியாளர்களில் (CLR) 136 பணியாளர்களை எவ்வித முன் னறிவிப்புமின்றி பல்கலைக்கழக நிர்வாகம் தற்போதைய நிதி நெருக் கடியை மட்டும் கணக்கில் கொண்டு 8.4.2022 அன்று திடீரென அந்தந்தப் பிரிவு துணைப்பதிவாளர், இயக்கு னர் கண்காணிப்பாளர், ஒருங்கி ணைப்பாளர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவு மூலம் தகவல் தந்து பணிநீக்கம் செய்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஜூலை 5 செவ்வாயன்று 85 ஆவது நாள் போராட்டமாக மதுரை சிம்மக்கல் அருகில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையிடம் மனுக் கொடுக்கும் போராட்டத்தை தலைவர் மு.வீரபாண்டி தலைமை யில் நடத்தினர். செயலாளர் மு.நாக ரோகிணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா ஆதரித்துப் பேசினார். அமைப்பின் பொருளாளர் செந்தில்குமார், அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ் உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.