தூத்துக்குடி, மார்ச் 8 தூத்துக்குடியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ட்ரையல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கம், நெல்லை சைக்கிள் கிளப் சார்பில் சைக்கிள் பேரணி நடை பெற்றது. தூத்துக்குடி போக்கு வரத்துப் பூங்கா முன்பிருந்து பேரணியை ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் பிளோரா கொடியசைத்து தொ டங்கி வைத்தார். இந்த பேரணி புதுக்கோட்டை தேரி சாலையில் உள்ள மைதானத்தை அடைந்தது. இதேபோல் நெல்லையில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி அதே மைதானத்தினை வந்தடைந்தது. பின்னர் அங்கு 2022ம் ஆண்டுக்கான பெண்கள் தின கருவான “நிலையான நாளைக்காக இன்றைய பாலின சமத்துவம்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சங்கத்தின் தலைவர் டாக்டர் பிளோரா, செயலாளர் மலர்விழி, நெல்லை சைக்கிள் கிளப் தலைவர் டாக்டர் அருள் விஜயகுமார் ஆகியோர் செய்தி ருந்தனர். இந்தியன் ஆயில் செர் வோ கம்பெனியினர் நிகழ்ச்சிக் கான பொருளுதவி செய்தனர்.