districts

img

தண்ணீரை பார்க்காத குளங்கள்

கடமலைக்குண்டு, நவ.14- கடமலை-மயிலை ஒன்றி யத்தில் பரமசிவன் கோவில், கண்மாய், சிறுகுளம், உள்ளிட்ட எட்டுக் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களைச் சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் முக்கிய  பங்கு வகிக்கும் இந்த கண்மாய் களுக்கு மூல வைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் இருந்து  வரத்து வாய்க்கால்கள் அமைக் கப்பட்டுள்ளது.  கடந்த சில வருடங்களாக கண்மாய்க்கு அமைக்கப்பட்டுள்ள வரத்துக் வாய்க்கால்களில் எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை. இதனால்  வரத்துக் வாய்க்கால் முழுவதும் மரம் செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் கண்மாய்களுக்கு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் அது கண்மாய்களுக்கு செல்வ தில்லை.  தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது.  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வட கிழக்குப் பருவமழை முடிவடையும் முன்பு வரத்துக் வாய்க்கால்களை சீரமைத்து கண்மாய்களில் நீரை தேக்க  வேண்டுமென  விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.