districts

img

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்

தேனி ,ஜூன் 1-

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

    விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று ஜூன் 1 வியா ழக்கிழமை  முதல் 120 நாட்க ளுக்கு அணையின் நீர் இருப்பிற்கு ஏற்றாற்போல் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்க ளுக்கு முதல் போக சாகு படிக்கு  பெரியாறு அணை யிலிருந்து விநாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி  மாவட்ட குடிநீர் தேவைக் காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் மொத்தம் வினாடிக்கு 300 கன அடி  வீதம்,  தண்ணீர் திறந்துவிட  அரசாணை வெளியிடப் பட்டது.அதன்படி வியாழ னன்று  தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவ லகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதி யில் அமைச்சர் ஐ.பெரிய சாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

   இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்),  ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சர வணக்குமார்  (பெரியகுளம்)    திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன்,முன்னாள் எம் எல்ஏ லட்சுமணன்,மதுரை நீர்வளத்துறை பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி,  பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர்  ந.அன்புச் செல்வம் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

   கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளை யம், தேனி மற்றும் போடி நாயக்கனூர் வட்டங்களில் உள்ள 14,707 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறும். முதல் போக சாகுபடிக்கு தேவையான நெல் விதை கள், உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், வேளாண்மை கடன் கூட்டு றவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, திறந்து விடப்படும் தண்ணீரை விவசாய பெருமக்கள் சாகுபடி செய் யும் நெற்பயிரில் மேம்படுத் தப்பட்ட தொழில்நுட்பங் களை கடைப்பிடித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண் டும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி  தெரிவித்தார். 

;