நாகர்கோவில், பிப். 8- நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பாலமோர் ரோட்டில் வடசேரி ராஜேஷ் தியேட்டர் முன்பு கழிவு நீரோடை சீரமைக் கும் பணி. பிப்.8 செவ்வாயன்று காலை தொடங்கியது. சாலையின் குறுக்கே பழு தூக்கி இயந்திரம் மூலமாக குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கழிவு நீரோடை சீர மைக்கும் பணி நடைபெற்று வருவதை அடுத்து போக்குவரத்து மாற்றப்பட்டுள் ளது. வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வடசேரியில் இருந்து காசி விஸ்வநாதர் கோவில் ஜங்ஷன் வெட்டூர்ணிமடம் ஜங்சன், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி ஜங்ஷன், டவர் ஜங்சன் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் வடசேரி பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. அந்த பகுதிகளில் போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில்போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.