திண்டுக்கல், மே 5- கொடைக்கானல்-பழனி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை குட்டி பலியானது. இதனை யடுத்து இறந்து போன சிறுத்தையை காட்டுப்பன்றிகள் சூழ்ந்து கொண்டு குதறிக்கொண்டிருந்தன. இந்நிலையில், வனத்துறை அதிகாரி கள் சிறுத்தையின் சடலத்தை மீட்டதாக கூறப்படுகிறது. கடுமையான வெயில் காலம் என்பதால் இரவு நேரங்களில் கொடைக்கானல் சாலைகளில் வன விலங்குகள் சுற்றித்திரிவது வாடிக்கை யாக உள்ளது.