districts

img

சிஐடியு நடைபயணக்குழுவிற்கு வேடசந்தூர், எரியோட்டில் வரவேற்பு

திண்டுக்கல், மே 29- தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி தென்காசியிலி ருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள சிஐடியு நடைபயணக்குழுவினர் திங்களன்று காலை வேடசந்தூர் வருகை தந்தனர். நடைபயணக்குழுத் தலை வர்கள் ராஜேந்திரன், பி.என். தேவா  தலைமையிலான குழுவினருடன் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்  பிரபாகரன், பேரா.மோகனா, என். ராமநாதன் என்.பாண்டியன் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள் இணைந்தனர். இவர்களுக்கு வேடசந்தூர் ஆத்து சுமைப்பணித் தொழிலாளர்கள் சார்பில் வர வேற்பளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்விற்கு நாக வேல் தலைமை வகித்தார். நாக ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், முத்து சாமி, ராமசாமி, பெரியசாமி, எம்.ஆர்.முத்துச்சாமி கே.ஆர். பாலாஜி, வனஜா, அரபு முஹமது,  பிச்சைமுத்து, தனசாமி, தமிழ்ச் செல்வி, சேகர், கண்ணழகி, ராம நாதன், முருகன், லோகநாதன், பழ னியம்மாள், பொன்மதி, வேலுச் சாமி ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து எரியோடு வந்த டைந்த கிருஷ்ணமூர்த்தி, விவ சாயிகள் சங்க மாநில முன்னாள் துணைத்தலைவர் பி.செல்வராஜ், விவசாயத் தொழிலாளர்கள் சங்க  மாவட்டச்செயலாளர் கே.அருள் செல்வன், கனகு, சுப்பிரமணி, சவட முத்து, காளியம்மாள், கருப்பாயி, செல்வம், சன்முகராஜன், வரத ராஜன், மல்லிகா, சவடமுத்து, காளி யம்மாள், காமலட்சுமி, வளர்மதி, லட்சுமி, சக்திவேல், தர்மர் ஆகி யோர் வரவேற்றனர். வடமதுரையில் நடைபய ணக்குழுவினரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி இணைந்து பிரச்சாரம் செய்  தார்.

வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற பொதுக்  கூட்டத்திற்கு சிஐடியு அமைப்பா ளர் எஸ்.ராஜூ தலைமை வகித் தார் வடமதுரை பேரூராட்சித் துணைத் தலைவர் எம்.மலைச்  சாமி வரவேற்றார். கே.பாலபாரதி, நடைபயணக் குழுத் தலைவர்கள் ராஜேந்திரன், தேவா, பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் குணசேகரன், சிஐடியு நிர்வாகி கள் சி.பி.ஜெயசீலன் தவக்குமார், எம்.கே.சம்சுதீன், எம்.மாணிக்கம், செல்வ தனபாக்கியம், கோபால், பாலச்சந்திர போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தமுஎகச சார்பில் தாமோதரன், தனசேகரன்,டான், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் குணசேக ரன், என்.பெருமாள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முருகன், மருதை மாதர் சங்கம்  சார்பில் ராஜேஸ்வரி மாற்றுத்திற னாளிகள் சங்கம் சார்பில் முத்துப்  பாண்டி, வாலிபர் சங்கம் சார்பில் சண்முகம், இந்திய மாணவர் சங் கம் சார்பில் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;