districts

மதுரை முக்கிய செய்திகள்

தடையில்லா உதவித்தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கிடுக! மாற்றுத்திறனாளிகள் மாநாடு வலியுறுத்தல்

மதுரை, ஜூலை 4-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை அரசரடி பகுதிக்குழு மாநாடு ஞாயிறன்று பகு திக்குழுத் தலைவர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. டி.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கே. ஜோதி அஞ்சலித் தீர்மானத்தை வாசித்தார், துணைத் தலைவர் எஸ். மாரிமுத்து வரவேற்றார். மாவட்டச் செய லாளர் பி. வீரமணி, மாவட்டத் தலைவர், மொழிப்போர் தியாகி தி. சீனிவாசன், தமுஎகச மாவட்டத் தலைவர் கா . இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், மாதர் சங்க பகுதிக்குழுச் செயலாளர் பி.மல்லிகா ஆகியோர் பேசினர். முன்னதாக பகுதிக்குழு செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் அறிக்கை சமர்பித்தார். துணை மேயர் டி.நாகராஜன் நிறைவுறையாற்றினார், முருகன் நன்றி கூறினார்.  மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தடையில்லா உதவித்தொகை ரூ. 3 ஆயிரம், கடுமையான மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சம்பளமின்றி தவிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்

விருதுநகர், ஜூலை 4- விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நாரணா புரம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலா ளர்களுக்கு மூன்று மாதமாக ஊதியம் வழங்காத நிலை  உள்ளது. உடனடியாக ஊதியம் வழங்கக் கோரி தொழி லாளர்கள் ஆட்சியரிடம் திங்கள் கிழமை கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து மாரிமுத்து என்பவர் கூறியதாவது: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாரணாபுரம் ஊராட்சியில் 16 துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. எங்களது குடும்பங்கள் வறுமையில்  வாடி வருகிறது. ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளிக்கும் ஊதியம் வேறுபாடு உள்ளது. பிற ஊராட்சிகளில் ஊதி யம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர்த்தப்பட்ட ஊதி யமும் வழங்காத நிலை உள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட  ஊதியத்தை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

தளவாய்புரத்தில் ஒருவர் கொலை

இராஜபாளையம், ஜூலை 4- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வர் தங்கச்சாமி. இவருக்கு மாரிமுத்து (53), சமுத்திரம் என்ற இரு மகன்கள் உள்ளனர். தங்கச்சாமிக்கு சொந்த மாக எலுமிச்சை தோட்டம் உள்ளது. எலுமிச்சை தோட் டத்தைப் பிரிப்பதில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயத் தோட்டத்தைப் பிரிப்பதில் தம்பி மாரிமுத்துவிற்கும் அண்ணன் சமுத்திரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சமுத்திரம் மற்றும்  அவரது மகன்கள் மணிகண்டன், தாளமுத்து ஆகிய மூவரும் சேர்ந்து மாரிமுத்துவை தாக்கியுள்ளனர். இதில்  மாரிமுத்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அரு கில் இருந்தவர்கள் மாரிமுத்துவை மீட்டு இராஜபாளை யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாரி முத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெ னவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். உயிரிழந்த மாரி முத்துவிற்கு மனைவி மாரியம்மாள், முருகேஸ்வரி என்ற  மகளும் உள்ளனர். சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சமுத்திரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போக்சோவில் கைது

இராஜபாளையம், ஜூலை 4- இராஜபாளையம் இனாம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி து தாய், தந்தையுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளி யேறி விட்டார். பின்னர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த வந்த சிறுமிக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது உற வினர் இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல்துறை யினர் சிறுமியின் தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்த  தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் 

தேனி, ஜூலை 4- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறை  தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் செய்தியாளர்கள் பயணத்தின்போது, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது , தேனி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22-ஆம் ஆண்டில்  தேர்வு செய்யப்பட்ட 13 கிராம பஞ்சாயத்துகளில் 20 தொகுப்புகள் கண்டறியப்பட்டு 422 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 35 ஆழ்துளைக் கிணறு கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிராமப் பஞ்சாயத்துகளில் பத்து பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  ஊஞ்சாம்பட்டி கிராமப் பஞ்சாயத்தில் உருவாக்கப்பட்ட 3-ஆவது தொகுப்பில் 23 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 510 அடி ஆழத்தில் ரூ.1.54 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. மேலும், ஆழ்துளைக் கிணற்றுக்குத் தேவையான மின் மோட்டார், புதிய இலவச மின் இணைப்பு மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் பொ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் ராஜா, வேளாண்மை அலுவலர்கள் சதீஷ் மற்றும் நிவேஷ், வேளாண்மை உதவி அலுவலர் கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள், செய்தி யாளர்கள், விவசாயிகள் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இரத்ததான முகாம்

சிவகங்கை, ஜூலை 4- சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனயில் இரத்ததான முகாம் முதல்வர் ரேவதி பாலன் தலைமை யில் நடைபெற்றது. மருத்துவ கண்காணிப்பாளர், மருத்து வர் கங்காலட்சுமி, துணை முதல்வர் ஷர்மிளா மருத்து வர்கள் கிருஷ்ண வேணி ஆகியோர் பங்கேற்றனர். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், செவியர்கள், ஆய்வக நுட்புணர்கள், அலுவலக ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்.

வீட்டுமனை பட்டா தாருங்கள் சிவகங்கை ஆட்சியரிடம் மனு

சிவகங்கை, ஜூலை 4- சிவகங்கை மாவட்டம் இடையமேலூர், தேக்கம் பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த எட்டு விவசாயத் தொழி லாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மணியம்மாள், சிவகங்கை ஒன்றியச் செயலாளர் முத்துகருப்பன் ஆகியோர் ஆட்சியர் மது சூதன்ரெட்டியிடம் மனு அளித்தனர்.

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சனை பாஜகவைக் கண்டித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் போராட்டம்

மதுரை, ஜூலை 4- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக  அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்  முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார். மதுரை-திருநெல்வேலி நான்கு வழிச்  சாலையில் உள்ள திருமங்கலம் கப்பலூரில்  விதிமுறையை மீறி தேசிய நெடுஞ்சாலைத்  துறை ஆணையம் டோல்கேட் அமைத்துள் ளது. 60 கி.மீ., இடைவெளியிலே நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். ஆனால், விதிமுறையை மீறி  அமைத்த இந்த சுங்கச்சாவடியை அகற்றக் கோரி திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.  ஒன்றிய அரசு 60 கிலோமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் பாஜக அரசு அகற்றாமல் பிடிவாதமாக உள்ளது. இந்நிலையில், கப்பலூர் டோல்கேட் அரு கில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் டோல்கேட்டை அகற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தினார். அப்போது ஏராளமானோர் திரண்டனர். இத னால் திடீரென போராட்டத்தில் குதித்தார் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார். முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தி யதால் ஆர்.பி.உதயகுமார் மற்றும் போராட்  டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட னர்.  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘’60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடி தென் தமிழகத்தின் நுழைவுப் பகுதியாக உள்ளது. ஆகவே அந்த முன்னுரிமை அடிப்  படையில் இதை அகற்றவேண்டும். தமிழக  அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும்’’ என்றார்.

முல்லைப்பெரியாறு அணையிலிருத்து  நீர் திறப்பு 1678 கனஅடியாக உயர்வு

தேனி, ஜூலை 4- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1678 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது . மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் திங்களன்று காலை நிலவரப்படி 127.70 அடியாக உள்ளது. ஞாயிறன்று 799 கன அடியாக இருந்த நீர்வரத்து திங்களன்று 1457 கனஅடியாக அதிகரித்துள்ளது. 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் திங்களன்று காலை முதல் 1678 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் நான்கு ஜெனரேட்டர்களும் முழுமையாக இயக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நீர் இருப்பு 4201 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 52.99 அடியாக உள்ளது. வரத்து 939 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2409 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.18 அடி. திறப்பு 3 கன அடி. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, இரவங்கல் ஆறு, மகாராஜ மெட்டு ஆகிய ஐந்து அணைகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் இந்த அணைகள் வறண்டு காணப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதே போல கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.  மழையளவு: .பெரியாறு 22, தேக்கடி 17.4, கூடலூர் 10.8, உத்தமபாளையம் 11.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

கட்டுமான சங்க கிளை அமைப்பு

மதுரை, ஜூலை 4-  மதுரை மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாகூர் நகரில் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. ஜி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி. சுப்பையா, தலைவர் ஏ. ராஜேந்தி ரன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. கோட்டை சாமி, 23-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், க.திலகர், ஏ.மகாலிங்கம், பகு திக்குழுச் செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர். தாகூர் நகர் கிளைத் தலைவர் வி.கார்த்திக், செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் பி. சந்தனப்பாண்டியன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். செல்லூர் அய்யனார் கோவில் கிளை தலை வர் எம். மாரிமுத்து, செயலாளர் ஜி. பாலசுப்பிர மணியன், பொருளாளர் கே. ஆண்டிபாலு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.