இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரதான சட்டங்களை இந்தி, சமஸ்கிருத மொழியில் ஒன்றிய பெயர் மாற்றம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், மாவட்டச் செயலாளர் மோகன் குமார் பேசினார். பாஸ்கர், சிவானந்தம், பொருளாளர் ராஜா மோகன், பாலமுருகன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து அமுதநாதன், மாவட்டத் தலைவர் ராமசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.