சிதம்பரம், பிப்.10- சிதம்பரம் நகராட்சியில் போட்டி யிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் வேன் மூலம் தெற்கு வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் 33 வார்டு வேட்பாளர்களையும் அறி முகப்படுத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வார்டு-5 போட்டி யிடும் தஸ்லிமா, வார்டு 33ல் போட்டியிடும் முத்துக்குமரன் உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்றனர். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், முன்னாள் எம்எல்ஏ சரவணன், சிதம்ப ரம் நகர செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகரச்செயலாளர் ராஜா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.