மதுரை, டிச.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்தத் தோழர் லெட்சுமணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 23-வது மாநாடு நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் கட்சியின் மூத்த தோழர் கள் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து விளாங்குடியில் உள்ள கட்சி யின் மூத்த தோழர் லெட்சுமணன் அவர்களை வீட்டில் சந்தித்து, நலம் விசாரித்து கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் சால்வை அணிவித்து கௌரவித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், தோழர் லெட்சுமணனின் மகனும் விளாங்குடி அண்ணாநகர் பகுதி கிளைச் செயலாளருமான ஸ்டாலின், கை லாசபுரம் கிளைச் செயலாளர் ஏ. முரு கேசன் ஆகியோர் உடனிருந்தனர்.