மதுரை,மார்ச் 25- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத - மக் கள் விரோத நடவடிக்கைக ளைக் கண்டித்து மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடை பெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பி னர் சார்பில் மதுரை அரசு போக்குவரத்து தலைமை யகம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. தொமுச பொதுச் செயலா ளர் வி.அல்போன்ஸ் தலை மை வகித்தார். சிஐடியு மாவட்ட நிணர்வாகிகள் வீ. பிச்சை, ஏ. கனகசுந்தர், ஏஐடி யுசி பொதுச் செயலாளர் எம். நந்தாசிங், டிடிஎஸ்எப் நிர்வாகி செண்பகம், எச் எம்எஸ் நிர்வாகி ஷாஜகான், ஏஎல்எல்எப் நிர்வாகி சங்கையா, டியூசிசி நிர்வாகி மோகன் ஆகியோர் பேசினர். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க தலைவர் பி. எம். அழகர்சாமி நன்றி கூறினார்.