திருவில்லிபுத்தூர், ஜன.7- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழக அர சின் இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் திருப்பாவை பாசுரங்கள் நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு அரசு இசை- கவின் கலை பல்கலைக்கழ கம் , தமிழ்நாடு இசைக்கல்லூரி யைச் சேர்ந்த மாணவ, மாண வியர்கள் ஆண்டாள் பாசு ரங்கள் நாலாயிர திவ்ய பிர பந்த பாடல்களை இடைவிடா மல் பாடினர். இந்நிகழ்ச்சிக்கு தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்துப் பேசி னார். இசை கவின் கலை பல்க லைக்கழக துணைவேந்தர் சௌமியா, விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி, ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா மடவார் வளாகம் வைத்தியநாத சாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர், சரக ஆய்வர் முத்து மணிகண்டன், திருவில்லி புத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் மல்லி.கு.ஆறுமுகம், நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன் ,கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் வாசுதேவன் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.