districts

img

சாதனை விளக்கப் பிரச்சாரம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 8-  விருதுநகர் மாவட்ட தெற்கு திமுக இளைஞரணி சார்பில் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உட்பட்ட பகுதிகளில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாத னைகள் விளக்கப் பிரச்சாரம் நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவருமான தங்கம் ரவிக்கண்ணன் தலைமை யில் இந்த தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் அலெக்சாண்டர் உரை யாற்றினார். நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் ,ஒன்றிய செயலாளரும் திருவில்லிபுத்தூர் ஒன்றிய குழு தலைவருமான மல்லி ஆறுமுகம் ,வ. புதுப் பட்டி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி சாந்தாராம், மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.