districts

தமிழகத்தில் குரங்கு அம்மை இல்லை: அமைச்சர்

சென்னை, மே 26 - தமிழகத்தில் குரங்கு அம்மை குறித்தான அச்சம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திருவள்ளுவர் தெரு, சுப்பிர மணியன் சாலை, ஜெயராமன் தெரு, மசூதி தெரு, ஆலந்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால் கட்டுமான  பணியை மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களை தேடி மருத்துவம் ஒரு மகத்தான சாதனை  படைத்திருக்கிறது. குறுகிய  காலத்தில் சுமார் 70 லட்சம் பயனாளி கள் பயனடைந்துள்ளனர். இது வரை முதல்கட்ட தடுப்பூசியை 93.73 விழுக்காடு பேர் செலுத்தி யுள்ளனர். 2ஆம் கட்ட தடுப்பூசியை 82.48 விழுக்காடு செலுத்தி உள்ளனர். 1 கோடியே 63 லட்சம் பேர்  முதல் தவணை தடுப்பூசி செலுத்தா மல் உள்ளனர். வரும் 12ஆம் தேதி  மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம்  இடங்களில் நடத்தப்பட உள்ளது என்றார். தொடர்ந்து, குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவர்களிடம் அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு வருக்கு குரங்கு அம்மை அறிகுறி கள் இருந்தன. சோதனை செய்ததில்  நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.  தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் இதுவரை இல்லை. எனவே,  குரங்கு அம்மை குறித்தான அச்சம்  தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

;