மதுரை மாவட்டத்தில் பல் வேறு கண்மாய்களுக்கு வைகை ஆற்றின் கிளை வாய்க்கால் கள் மூலம் தண்ணீர் செல்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு கிருதுமால், அவனியாபுரம் மற்றும் சிந்தாமணி வாய்க்கால் சீரமைத்து பாலங்கள் அமைப்பதற்காக 5009 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் கால்வாய் களாக மாற்றப்பட்டது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. கிருதுமால் கால்வாய், பனகல் ரோடு கால்வாய், அவனியாபுரம் கால் வாய், சிந்தாமணி கால்வாய், அனுப்பா னடி கால்வாய் உட்பட 13 கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்குள் 44.23 கி.மீ. தூரம் செல்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 11 மாதங்கள் கிருதுமால் நதியில் நீர்வரத்து இருந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் கிருதுமால் நதி என்ற அடையாளத்தை இழந்து சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது. 25 ஆண்டு களுக்கு முன்னர் மதுரை மாநகரில், 120 அடி அகலத்தில் பாய்ந்து கொண்டி ருந்த கிருதுமால் ஆறு, ஆக்கிரமிப்பு களால், தற்போது 10 அடி அகல சாக்கடை நீர் வடிகாலாக சுருங்கி விட்டது.
நதி,சாக்கடை கால்வாயாக மாறிய அவலம்
மதுரை நகரில் மட்டும் 15 கிலோ மீட்டர் பயணம் செய்யும் கிருதுமால் நதி தற்போது மதுரை நகரின் பிரதான கழிவு நீர்க் கால்வாயாக மாறி கழிவு களைச் சுமந்து ஓடுவது பெரும் அவ லம். அண்மைக்காலத்தில் கழிவு நீர் கால்வாய்களாக மாறிய நதியில் மிக முக்கியமானது கிருதுமால் நதி. வைகையாற்று பகுதியில் இருந்து கிளை வாய்க்கால் மூலம் அவனியாபுரம் கண்மாய்க்கு பெத்தா னியாபுரம், பாண்டியன் நகர், அர சரடி, எஸ். எஸ். காலனி, ஜெய்ஹிந்து புரம், வில்லாபுரம் வழியாக அவனியா புரம் கண்மாய்க்கு செல்லும் அவனி யாபுரம் வாய்க்கால். மதுரை அருப்புக்கோட்டை சாலையில் மண்டேலா நகருக்கு சற்று முன் அமைந்துள்ளது கிளாக்குளம் கண்மாய். சுமார் 150 ஏக்கர் பரப்ப ளவு கொண்டது. சாமநத்தம் மற்றும் கிளாக்குளம் கண்மாய்க்கு நீராதார மாக விளங்கும் அவனியாபுரம் கண் மாய் இப்போது சரியான நீர்வரத் இல்லாததால் கழிவுநீர்க் கிடங்காக மாறியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தப்பிப் பிழைத்த பெரும்பாலான கண்மாய் கள் தூர்ந்து போய் உள்ளன. குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, நாசமான நிலையில் உள்ளது. மதுரையில் இருந்த பல ஊரணி கள், கண்மாய்களில் பல்வேறு கட்டி டங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வலை வீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையம். செங்குளம்- மதுரை மாவட்ட நீதி மன்றம். உலகனேரிக் கண்மாய் - உயர் நீதி மன்றக் கிளை. வண்டியூர் கண்மாய் - மாட்டுத் தாவணி பேருந்து நிலையம், பூ, நெல் மார்கெட். தல்லாகுளம் கண் மாய் - மதுரை மாநகராட்சி, சட்டக் கல்லூரி. புதூர் கண்மாய் - மாவட்ட வருவாய் அலுவலர்கள் குடியிருப்பு.கோச்சடை கண்மாய் - தனியார் குப்பை கொட்டும் கிடங்காக உள் ளது. வில்லாபுரம் கண்மாய் - அரசு வீட்டு வசதி வாரியக் குடி இருப்பு கள். அவனியாபுரம் கண்மாய் - திடக் கழிவுக் கிடங்கு. பீபி குளம் கண்மாய் - சுங்கத் துறை, தபால் நிலையமாக உள்ளது. மானகிரி கண்மாய் - வக்பு வாரியக் கல்லூரியாக உள்ளது.
கால்வாய்களை புனரமைத்திடுக!
மதுரை மாவட்டத்தின் நீர் ஆதா ரமாக இருந்த பல கண்மாய்கள் தடம் தெரியாமல் போய்விட்டன. மதுரை மாவட்டத்தில் மிஞ்சியுள்ள நீர் நிலை களான கண்மாய்களை பாதுகாக்க வேண்டுமெனறால் மழைநீர் கால் வாய் மற்றும் வைகை ஆற்றுப் பகுதி யிலிருந்து வாய்க்கால்களுக்கு செல்லும் கால்வாய்களை புனர மைக்க வேண்டும். குப்பைகள் கொட் டப்படுவதை தடுக்க வேண்டும். 1998-ஆம் ஆண்டு வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அவனியாபுரம், சிந்தாமணி, அனுப் பானடி போன்ற கிளை வாய்க்கால் களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி யது. இதனால் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. இன்றைக்கு வாய்க்கால்களில் தேங்கும் குப்பை களை அகற்றுவதற்கு முழுமையான நடவடிக்கை என்பது இதுவரை இல்லை.
செல்லூர் கண்மாய், சிந்தாமணி கால்வாய் போன்றவைகளை தூர் வாருவதற்கு நிதிகள் கடந்த ஆட்சி யில் ஒதுக்கப்பட்டது. செல்லூர் கண் மாய் ஒரு பகுதி மட்டும் தூர்வாரப் பட்டு சிந்தாமணி கால்வாய் துவங்கிய இடத்தில் மட்டுமே தூர்வாரப்பட்டது. மாடக்குளம் கண்மாய் செல்லும் நீர் முத்துப்பட்டி வீரம் உடையான் கண்மாய்க்கு சென்று அது முழு கொள்ளளவை எட்டியது. ஜெய்ஹிந்த் புரம் அம்பேத்கார் காலனி பகுதியில் உள்ள கண்மாய்க்கு சென்று அது அவனியாபுரம் செல்லும் என்று அப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார் கள். தொடர்ந்து ஒரு மாத காலமாக மழை பெய்தும் நீர் வரத்து வைகை யாற்றில் அதிகரித்தும் கால்வாய்கள் சுத்தம் செய்யாததால் ஆற்றில் இன் றைக்கு பெருக்கெடுத்து ஓடும் நீர் எந்த கால்வாய்களுக்கும் செல்லவில்லை என்பதே பெரும் வருத்தமான உண்மை. தற்போது இருக்கின்ற நீர்நிலை களை பாதுகாக்க மதுரை மாநக ராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறை நிர்வாகமும் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி யினர் வலியுறுத்தியுள்ளனர்.
-ஜெ.பொன்மாறன்