தேனி, ஜன.18- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட மேலச்சொக்கநாபுரம் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் ஜனவரி 18 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தலைமை யில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலை வர் பேசுகையில், தமிழக அரசால் செயல் படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்து பொதுமக்களுக்கும் சென்ற டையும் வகையில், அனைத்துத்துறை அலு வலர்களையும் ஒருங்கிணைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரில் சென்று நடத்தப்படும் முகாமே இந்த மக்கள் தொடர்பு முகாம். மக்கள் தொடர்பு முகாம்களில் பெறப் படும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு, தகுதி வாய்ந்த மனுக் களுக்கு விரைந்து அரசின் பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். இம்மக்கள் தொடர்பு முகாமில் பல் வேறு துறைகளின் சார்பில் 155 பயனாளி களுக்கு ரூ.7.02 இலட்சம் மதிப்பிலான அர சின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றது. இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று தெரிவித்தார். இம்முகாமில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பால் பாண்டி, மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மேலச்சொக்கநாதபுரம் பேரூ ராட்சி மன்றத்தலைவர் கா.கண்ணன் காளி ராமசாமி, துணைத்தலைவர் பஞ்சவர் ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) தனலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் இராஜராஜேஸ் வரி, வட்டாட்சியர் ஜலால், செயல் அலு வலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.