districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனி ஆவினை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

தேனி, மார்ச் 20-  தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி ஆவின் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய  அலுவலகத்தில்(ஆவின்) கடந்த 2021}ஆம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் 38 பேர் பணி நியமனம் செய்யப்  பட்டனர். இந்த பணி நியமனத்தை ரத்து செய்து கடந்த  2023, ஜனவரி மாதம் ஆவின் பொது மேலாளர் உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தற்காலிக பணியாளர்கள் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.  ஆனால், தேனி ஆவின் பொது மேலாளர் நீதிமன்ற உத்தரவை ஏற்று தங்களை தொடர்ந்து பணியாற்ற அனு மதிக்கவில்லை என்று புகார் தெரிவித்து, பழனி செட்டிபட்டியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதியில்லை: நீதிமன்றம்

மதுரை, மார்ச் 20-   இந்து மக்கள் கட்சி சார்பாக  சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி இளங்கோன் தள்ளு படி செய்து உத்தரவிட்டார். தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு  ஏப்ரல் 1, 2 தேதி ஆகிய இரு நாட்களில் நடத்த திட்டமிடப்  பட்டது. இதற்கு அனுமதி வழங்க அர்ஜூன் சம்பத் ஆதரவா ளர்கள் நீதிமன்றத்தை நாடினார். இது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கையை பரிசீலனை செய்த நீதி மன்றம் மாநாடு நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்  பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இருசக்கர வாகனம் திருடியவர் கைது

தேனி, மார்ச் 20- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி கிரா மத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் வினோத்குமார்(27). இவர் கடந்த 17-ஆம் தேதி தனது அப்பா செல்லத்துரைக்கு உடல்நிலை சரியில்லாததால் அருகில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்று சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை. இது குறித்து ராஜதானி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில்  விசாரணை நடத்திய காவல்துறை யினர் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக் கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (31) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அ.இ.பா.பிளாக் போராட்டம்

தேனி, மார்ச் 20- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தாக மோடி தலைமையிலான  அரசைக்  கண்டித்து தேனி மாவட்ட அகில இந்திய பார்வார்ட் பிளாக்  கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. எரிவாயு  சிலிண்டருக்கு மாலை அணிவித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்டச் செயலாளர் எஸ்  ஆர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். இணைச் செய லாளர் எம்பிஎஸ்.முருகன், மாவட்டத் தலைவர் ராமசாமி,  துணைத் தலைவர் நேதாஜி குமார் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிப்பு

திருவில்லிபுத்தூர், மார்ச் 20- கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியும் கலச லிங்கம்  மருத்துவமனையும் இணைந்து திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கல்லூரி செயலாளர் எஸ்.சசி  ஆனந்த் தலைமையில் தேசிய தடுப்பூசி தினத்தை கொண்டாடின. அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் ஏ.காளிராஜ்  மருத்துவர் எம். பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். தடுப்பூசி தினத்தை முன்னிட்டு தடுப்பூசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.   நிகழ்வில் டாக்டர் ஏ.சேவியர், செல்வசுரேஷ், கல்லூரி  முதல்வர் என். வெங்கடேஷன், பேராசிரியர்கள் ஆர்.ராஜ பாண்டி. கே.விவேகானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

மரம் வெட்டியவர்கள் மீது புகார்

திருவில்லிபுத்தூர், மார்ச் 20- திருவில்லிபுத்தூர் நகராட்சி ஊரணிப்பட்டி தெருவில் இருந்த புளியமரம் மற்றும் வேப்பமரங்களை உரிய அனு மதி இன்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெட்டி அகற்றி னர். நகராட்சி அனுமதி இன்றி மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 17-ஆவது வார்டு  கவுன்சிலரும், நகராட்சி துணைத் தலைவருமான செல்வ மணி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார். நகராட்சி  ஆணையர் ராஜமாணிக்கம் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனுக்களை குவித்த மக்கள்

இராமநாதபுரம், மார்ச் 20- இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம்  திங்களன்று ஆட்சியர்  ஜானி டாம் வர்கீஸ்  தலைமை யில் நடைபெற்றது. ஆட்சியரிடம்  300-க்கும் மேற்பட்டோர் மனுக்களை குவித்தனர்.   மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வுகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆட்சியர். தொடர்ந்து, வருவாய்த்துறையின் மூலம் முதல மைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்  வீதம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை, மாவட்ட பேரிடர்  மேலாண்மைத்துறை மூலம் பேரிடர் காலங்களில் மக்க ளுக்கு முதலுதவி செய்வதற்காக தன்னார்வர்களுக்கு பயிற்சி வழங்கும் ஆப்த மித்ரா திட்டத்தில் கீழ் பயிற்சி பெற்ற 200 நபர்களுக்கு பயிற்சிச் சான்றிதழ்களை ஆட்சி யர் வழங்கினார்.

கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு

கடமலைக்குண்டு, மார்ச் 20- தேனி மாவட்டம் கண்டமனூர் கிராமத்தில்  28 ஏக்கர் பரப்பளவில் புதுக்குளம் கண்மாய்  அமைந்துள்ளது. இந்தக் கண்மாயைச் சுற்றி லும் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்ட மனூர் பெரியஓடையிலிருந்து கண்மாய்க்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தனி நபர்கள் கண்மாயின் பெரும் பாலான பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மற்ற பகுதிகளில் மரம், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.  மழை பெய்து ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டாலும் அதை கண்மாயில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக நீர் தேக்கி வைத்தால் கண்டமனூர் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவ சாயம் செழிப்படையும். குடிநீர்த் தட்டுப்பாடு அபாயமும் நீங்கும். அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து புதுக்குளம் கண்மாய் ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்ட கிராமங்களில் கால்நடை மருந்துகள் பற்றாக்குறை

கடமலைக்குண்டு, மார்ச் 20- தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, வருஷநாடு, குமணன்தொழு உள்ளிட்ட ஏழு கிராமங்களில் அரசு கால்நடை மருத்து வமனைகள் செயல்பட்டு வருகிறது. இந்த  மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்க ளாக கால்நடைகளுக்கான மருந்து, மாத்தி ரைகள் பற்றாக்குறை உள்ளது. நோய்த்  தாக்குதலுக்கு உள்ளாகி கால்நடைகளு டன் மருத்துவமனைக்கு வரும் மக்கள்  மருத்துவர்களிடம் மருந்து, மாத்திரை களின் பெயரை எழுதி வாங்கி தனியார் மருந்தகங்களில் அதிகப் பணம் கொடுத்து  வாங்க வேண்டிய நிலை உள்ளது.  கடந்த மாதம் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் பெய்த சாரல் மழையின் காரண மாக நாட்டுக்கோழிகளை நோய் தாக்கியது. அப்போது மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு இல்லாததால் ஏரா ளமான கோழிகள் நோய் தாக்குதலுக்கு பலி யானது.  கால்நடை மருத்துவமனைகள் மூலம் ஆடு,மாடுகளுக்கு தாது உப்பு மற்றும் குடற்புழு நீக்க மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக வழங்கப்படுவதில்லை. மருத்  துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களும் காலி யாக உள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் விவ சாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு  உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெறுகிறது. இதைக் கருத்தில் கொண்டு கால்நடை மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். தேவையான அளவு மருந்து-மாத்திரைகள் இருப்பு வைக்க  அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கன்னிவாடி பேரூராட்சி முற்றுகை

சின்னாளபட்டி, மார்ச் 20-  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடிப் பேரூ ராட்சி 15-ஆவது வார்டில் அருந்ததியர் சமூ கத்தை சேர்ந்தவர்கள்  வசிக்கின்றனர். இவர்களுக்கு பேரூராட்சி மூலம் பத்து  நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படு கிறது. ஒரு குடும்பத்திற்கு மூன்று குடங்கள் கூட குடிதண்ணீர் கிடைக்கவில்லை.  கடந்த  இரண்டு வருடமாக இதே நிலைதான் நீடிக்கி றது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தி டம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் திங்களன்று அருந்த தியர் மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு குடிநீர் பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க  வந்தனர். செயல் அலுவலர் பிரச்சனை தொடர்பாக தலைவரைப் பாருங்கள், கவுன்  சிலரைப் பாருங்கள் என்று கூறினார்.  இதை யடுத்து மக்கள் பேரூராட்சியை முற்றுகை யிட்டனர். இதற்கிடையில்  கன்னிவாடி காவல்நிலையத்திற்கு  தகவல் சொல்லப் பட்டு மக்கள் காவல் நிலையம் சென்று ஆய்வாளரை சந்தித்து விவரங்களை கூறினர்.  குடிநீர்ப் பிரச்சனை குறித்து ரெட்டி யார்சத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செயலாளர் சக்திவேல் கூறுகை யில், “ கன்னிவாடி பேரூராட்சியில் 15 வார்டு களிலும் அடிப்படை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை.  செயல் அலுவல ரிடம் புகார் தெரிவித்தால் அவர் தலைவரை, கவுன்சிலரைப் பாருங்கள் என்கிறார்.  பேரூ ராட்சிகளின் உதவி இயக்குநர் இப்பிரச்ச னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மதுரையில் டி.எம்.சௌந்தர்ராஜன் சிலை பொருத்தமான இடத்தில் அமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

மதுரை, மார்ச் 20-   மதுரையில் திரைப்படப் பாடகர்  டி. எம். சௌந்தர்ராஜ னுக்கு அமைக்கப்படவுள்ள சிலையை பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டுமென   மார்க்சிஸ்ட்  கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. சில இடங்களையும் கட்சி பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ மதுரை மாநகரில் பிறந்து, தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்ன னாக த் திகழ்ந்த மறைந்த திரைப்பட பாடகர்  டி. எம். சௌந்தர்ராஜனுக்கு மதுரையில் முழு உருவசிலை அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி    15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வந் துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில்  மறைந்த  தோழர் என். நன்மாறன் இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துள் ளார். தற்போது  மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் மு.பூமிநாதனும்  டி. எம். சௌந்தர்ராஜனுக்கு  சிலை அமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார் .  இந்த நிலையில் தமிழ்நாடு அரசு  டி.எம். சௌந்தர் ராஜனுக்கு சிலை வைப்பது என முடிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறத . அவரது முழு உருவ சிலையை மதுரை திருமலைநாயக்கர் மகா லில் உள்ள பூங்காவிலோ அல்லது முனிச்சாலை தின மணி தியேட்டர் அருகில் உள்ள மாநகராட்சியின் முன்னாள் மண்டல அலுவலக வாசல் முன்பாகவோ அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

“குப்பைகளுக்கு  கூடுதல் இடம் ஒதுக்கீடு” 

சின்னாளபட்டி, மார்ச் 20- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலை  பேரூராட்சிக் கூட்டம் தலைவர் பிரதீபாகனகராஜ் தலைமை யில் நடைபெற்றது. செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்திபாரதி ராஜா வரவேற்றார். கூட்டத்தில், “அதிகரித்துரும் மக்கள்  தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் குப்பைகளுகளைக் கொட்ட கூடுதல் இடம் தேர்வு செய்யப்படும். பேரூ ராட்சிக்குட்ட பகுதிகளில் நெகிழி பைகளை ஒழிக்கப்படும்.  பேருந்து நிலையத்திலுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பராமரிக்கப்படும் என்பன உட்பட பல்வேறு  தீர்மா னம் நிறைவேற்றபட்டது.  சுகாதார ஆய்வாளர் கணேசன்,  சுகாதார மேற்பார்வையாளர்கள் தங்கத்துரை, சரளா  தலைமை எழுத்தர் கலியமூர்த்தி உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கொட்டை முந்திரி விவசாயிகள் கவலையை போக்குமா அரசு?

கடமலைக்குண்டு, மார்ச் 20- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் கொட்டைமுந்திரி சாகுபடி நடைபெற்று வரு கிறது.  கடந்தாண்டு போதுமான மழை பெய்ததால் கொட்டைமுந்திரி உற்பத்தி அதிகரித்தது. கொட்டை முந்திரிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. கடந்தாண்டு ஒரு கிலோ கொட்டைமுந்திரி ரூ.60-க்குத் தான் விற்பனையானது. இதனால் கொட்டை முந்திரி விவசாயிகளுக்கு  நஷ்டம் அடைந்தனர்.  இந்தாண்டு தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொட்டை முந்திரியின் உற்பத்தி அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “ உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் விலை அதிகரித்தால் மட்டுமே  கடந்தாண்டு ஏற்பட்ட நஷ்டத்தை இந்தாண்டு ஓரளவு ஈடு செய்ய முடியும். இந்தாண்டும் விலை குறைந்தால் நஷ்டமே ஏற்படும். கடன் சுமை எங்களை மேலும் அழுத்  தும்.  கொட்டை முந்திரிக்கு அரசு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றனர்.

சிவகங்கையில் தமுஎகச பயிலரங்கு 

சிவகங்கை, மார்ச் 20- சிவகங்கையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அள விலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்  தங்க.முனியாண்டி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அன்பரசன்தொடக்க உரை யாற்றினார். ஜீவசிந்தன் “சிவகங்கை மாவட்டத்தில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடந்து வந்த பாதை” எனும் தலைப்பில் உரையாற்றினார். மாநி லத் துணைப் பொதுச்செயலாளர் கே. வேலாயுதம் “அமைப்பும், அமைப்பாவதன் அவசியமும்” என்னும்  தலைப்பில் கருத்துரை வழங்கினார். சாதிக், ஜீவா ஆகி யோர் கவிதை வாசித்தனர். கிராமியப்  தமிழ்க்கனல், வைகை பிரபா, வைகறை கோமதி, சின்னக் கண்ணன், அலைகள் நாராயணன், சந்திரன் ஆகியோர் கிராமியப் பாடல்கள் பாடினர்.   பள்ளிக் கல்லூரிகளில் பயிலும் இளம் படைப்பாளி களை இனம் கண்டு அவர்களது திறனை மேம்படுத்து வது,  மாவட்ட அளவில் பேச்சு, கவிதை, பாடல், ஓவியம்,  நாடகம்) பயிலரங்கங்களை  நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பழங்குடி  மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் மறுப்பு

திண்டுக்கல், மார்ச் 20- திண்டுக்கல் மாவட்;டம் நிலக்கோட்டை என்.புதுப்பட்டி  பகுதியில் காட்டு நாயக்கன் பழங்குடி  சமூக மக்கள் சுமார்  3,500 பேர் வசித்து வருகிறார்கள். இந்த மக்களின் குழந்தை களுக்கு பள்ளிக் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு சாதிச்சான்றிதழ் தேவைப்படுகிறது. மாணவ, மாணவி கள் தரணிதரன், வெங்கடேஷ், தரணீஸ்வரன், அரசு வேங்கையன், யுவரஞ்சனி, ரஞ்சித், நந்தினி, அருண், காளியப்பன்  25 பேர் சாதிச்சான்றிதழ் கேட்டு  ஆன் லைன்  மூலம் மனுச்  செய்துள்ளனர். இவர்களுக்கு சாதிச்சான்றி தழ் தர இயலாது என மனு தள்ளுபடி செய்யப்பட்டுள் ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தி னர் திங்களன்று  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர்.

காவேரி-குண்டாறு-வைகை இணைப்புத் திட்டத்தை  நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சிவகங்கை, மார்ச் 20- காவேரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லத் தலைவர் பெ.சண்முகம் கூறினார். சிவகங்கையில் திங்களன்று அவர் அளித்த பேட்டி:-  ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நாடாளு மன்றம் நோக்கி  நடைபெறும் பேரணியில் தமிழகத்திலிருந்து பத்தாயிரம் விவசாயி கள் பங்கேற்க உள்ளனர். தமிழக பட் ஜெட்டில் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறி விப்பை வரவேற்கத்தக்கது. டாக்டர் அம்  பேத்கர் புத்தகங்கள் அனைத்தும் தமிழில்  மொழி பெயர்ப்பு செய்வோம் என்ற அறி விப்பு வரவேற்கத்தக்கது.  நெல் கொள்முதல் மையங்களில் ஒரு  மூடைக்கு ரூ. 40வசூல் செய்வதை தமிழக  முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். மதுரை மாவட்டம் மேலூரில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் நெல்  லுக்கு ஒரு மூட்டைக்கு ரூ. 80 கேட்டு  தர மறுத்ததால் அவர் தாக்கப்பட்டுள்ளார். கொள்முதல் நிலைய முறைகேட்டை தடுக்க  வேண்டும். காவேரி-குண்டாறு வைகை- இணைப்பு திட்டம் நிறைவேறினால் ஏழு மாவட்டங்களின் நீர் ஆதாரம் பெருகும். விவசாயிகள் பயன்பெறுவார்கள். திட் டத்தை துரிதமாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


 





 

;