திருவனந்தபுரம், ஜன.12- இடுக்கி பைனாவு பொறியியல் கல்லூரியில் நடந்த கொடூர கொலையை, கல்லூரிக்கு வெளியில் இருந்து வந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்தியதாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில், கல்வி வளாகங்களில் மாணவர்கள் கொல்லப்படுவது சகிக்க முடியாதது. இதுபோன்ற சம்பவம் எந்த கல்லூரியிலும் மீண்டும் நடக்காத வகையில், உயர்கல்வித்துறை மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களைக் கொன்று அரசியல் பகை தீர்க்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.