districts

img

தொடர் மழையால் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது கூலித்தொழிலாளி குடும்பத்தினர் உயிர் தப்பினர்

வேடசந்தூர், ஜூன் 17-  வேடசந்தூர் அருகே தொடர் மழையால் தொகுப்பு  வீடு மேற்கூரை இடிந்து விழுந்  தது.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள  ஸ்ரீராமபுரம் ஊராட்சி மேல்  மாத்தினிபட்டியில் ஆதிதிரா விடர் காலனியைச் சேர்ந்தவர்  கூலித்தொழிலாளி ராதா கிருஷ்ணன் (33) . இவருக்கு மாரியம்மாள்(30) என்ற மனை வியும், தக்சன்யா, ஸ்ரீஸஷ்விந்த் சபரி என்ற இரு குழந்தை களும் உள்ளனர். 30 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் மழை  பெய்தது. இதனால் தாங்கள் வசித்து வந்த தொகுப்பு வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் புதனன்று இரவு ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகே உள்ள தனது சித்தப்பா பழனிச்சாமி என்பவரின்  வீட்டில் தூங்கினர். இந்நிலையில் வியாழனன்று அதிகாலை 5 மணிக்கு ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வீடு மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் மேற்கூரை முழு வதும் இடிந்து விழுந்தது. வீட்டின் உள்ளே இருந்த கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இடிபாடுகளில் நொறுங்கியது. ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தூங்கியதால் உயிர் தப்பினர். இது குறித்து வேடசந்தூர் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே ஊரில் கடந்த 30 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட  10க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் இதுபோல இடிந்து  விழும் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சேதமான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆதிதிரா விட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;