districts

img

தெரு விளக்கு எரியவில்லை என மனு அளித்த ஒரு வாரத்தில் விளக்கையே அகற்றிய கொடுமை!

தூத்துக்குடி, டிச.1- தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி அருகே உள்ள தோனுகால் பஞ்சாயத் திற்குட்பட்ட  படர்ந்தபுளி கிராமம் கீழ தெரு  பகுதியில் பட்டியிலினத்தை சார்ந்தவர்க ளும், அருந்ததியர் இன மக்களும் வசித்து வருகின்றனர். அப்பகுதி தெரு முகப்பில் உள்ள மின் கம்பத்தில் பெரிய மெர்குரி விளக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  அமைக்கப்பட்டது. பத்து நாட்கள் மட்டும்  எரிந்த நிலையில் பின்னர் பல மாதங்களாக எரியாமல் இருந்துள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் தெய் வேந்திரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ) சீனிவாசனி டம் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று பழுதடைந்த மின்கம்பதை நீக்கி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், நீண்ட நாட்களாக எரியாமல் உள்ள தெரு விளக்கை சரி செய்ய வேண்டும், மயான கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும், சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்னதாக பழுதடைந்த மின் கம் பத்தை நீக்கி விட்டு புதிய மின் கம்பத்தை  வைத்து விட்டு அதில் இருந்த விளக்கினை அகற்றி சென்று விட்டனர்.  எனவே மாவட்ட ஆட்சியர்  தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;