districts

img

வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை முதல்வருக்கு இடைக்காட்டூர் ஊராட்சி தலைவர் நன்றி

சிவகங்கை, ஜன.25- தமிழக இளைஞர் களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவு போட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  அவர் மேலும் கூறுகையில், போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் உள்ள தால் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு 100 சதம் கிடைக்கும் வாய்ப்பு  உள்ளதை இளைஞர்கள் வரவேற்று தமி ழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநிலப் பொதுத்துறை நிறுவனங்களின் பணி யிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இளை ஞர்களை 100 சதவீதம் தேர்வு செய்யும் வகையில், அனைத்துப் போட்டித் தேர்வுகளி லும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.