தூத்துக்குடி, ஜன.13 மதுரை - தூத்துக் குடி இடையே அருப்புக் கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிதாக இரட்டை ரயில் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி-புதியம்புத்தூர்-மேல மருதூர் இடையேயான 18 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதன் படி தூத்துக்குடி மீள விட்டான் ரயில் நிலையத்தி லிருந்து, மேலமருதூர் ரயில் நிலையம் வரையான 18 கிமீ தூரத்திற்கு 120 கி.மீ. வேகத்தில் இரயில் என்ஜின் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் புதனன்று நடத்தப் பட்டது. சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த மதுரை ரயில்வே துணை தலைமை பொறியாளர் நந்தகோபால் கூறுகையில், இத்திட்டத்திற்காக ரூ.2100 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டு பணிகள் நடை பெற்று வருகிறது. மீள விட்டானிலிருந்து மேல மருதூர் வரை ரூ.260 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சி யாக இந்த மாத இறுதியில் ரயில்வே பாதுகாப்பு கமிஷ னர் ஆய்வு செய்த பின் இவ்வழித்தடத்தில் மக்கள் பயன்பாட்டிற்குரயில்கள் இயக்கப்படும். இத்திட்டத்தை முழுமை யாக நிறைவேற்றி முடிக்க விருதுநகர்,
தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங் களிலிருந்து இன்னமும் 800 ஹெக்டர் அளவுக்கு இடம் தேவைப்படுகிறது. இவ்வ ழித்தடத்தில் விளாத்திக் குளம், குளத்தூர், மேல மருதூர், அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி ஆகிய ஊர்கள் உள்பட புதியதாக 10 ரயில் நிலையம் வர உள்ளன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இவ்வழியாக சரக்குரயிலை விரைவாக இயக்க முடியும். இத்திட்டத் தின் மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கும் உரிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். ரயில் பயணிகள் நல சங்க செயலாளர் பிரம்ம நாயகம் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் மதுரை- அருப்புக் கோட்டை- விளாத்திகுளம்-மேலமருதூர் வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வரு கிறது. விரைவில் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொ டங்க வேண்டும். தற்போது மேலமருதூர் முதல் தூத்துக் குடி வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடை பெற்று முடிந்துள்ளது. இனி மேலமருதூரிலிருந்து குளத்தூர், விளாத்திகுளம் வரை உள்ள 24 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் ரயில் பாதை அமைக்க வேண்டி உள்ளது. எனவே இதற்கான இடங்களை கையகப்படுத்தி விரைவில் மதுரை-அருப்புக் கோட்டை-தூத்துக்குடி வழித் தடத்தில் ரயில்களை இயக்க ஆவன செய்ய வேண்டும் என்றார்.